Showing posts with label ஏலாதி. Show all posts



ஏலாதி 76 - 80 of 80 பாடல்கள்

76. ஒல்லுவ நல்ல உருவவேற் கண்ணினாய்
வல்லுவ நாடி வகையினால் - சொல்லின்
கொடையினார் போகம் சுவர்க்கம் தவத்தால்
அடையாத் தவத்தினால் வீடு.

விளக்கவுரை :

77. நாற்கதியும் துன்ப நவைதீர்த்தல் வேண்டுவான்
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூற்கதியின்
எல்லை உயர்த்தார் தவமுயலின் மூன்(று) ஐந்(து) ஏழ்
வல்லைளீ(டு) ஆகும் வகு.

விளக்கவுரை :

78. தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி
வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார்
கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க்(கு) ஈந்தார்
வைத்து வழங்கிவாழ் வார்.

விளக்கவுரை :

79. சாக்காடு கேடு பகைதுன்பம் இன்பமே
நாக்காடு நாட்டறை போக்குமென - நாக்காட்ட
நட்டார்க்(கு) இயையின் தமக்கியைந்த கூ(று) உடம்
பட்டார்வாய்ப் பட்டது பண்பு.

விளக்கவுரை :

80. புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில்
நிலையாளர் நீர்மை இழந்தார் - தலையாளர்க்கு
ஊண்கொடுத்(து) ஊற்றாய் உதவினார் மன்னராய்க்
காண்கொடுத்து வாழ்வார் கலந்து.

விளக்கவுரை :

ஏலாதி முற்றிற்று



ஏலாதி 71 - 75 of 80 பாடல்கள்

71. நடப்பார்க்(கு) ஊண் நல்ல பொறைதாங்கி னார்க்(கு)ஊண்
கிடப்பார்க்(கு)ஊண் கேளிர்க்(கு)ஊண் கேடின்று உடல்சார்ந்த
வானகத்தார்க்(கு) ஊணே மறுதலையார்க்கு ஊண்அமைத்தான்
தானகத்தே வாழ்வான் தக.

விளக்கவுரை :

72. உணராமை யால்குற்றம் ஒத்தான் வினையாம்
உணரான் வினைப்பிறப்புச் செய்யும் - உணராத
தொண்டுஇருந் துன்பம் தொடரும் பிறப்பினால்
மண்டிலமும் ஆகும் மதி.

விளக்கவுரை :

73. மனைவாழ்க்கை மாதவம் என்றிரண்டும் மாண்ட
வினைவாழ்க்கை யாக விழைப - மனைவாழ்க்கை
பற்றுதல் இன்றி விடுதல்முன் சொல்லுமேல்
பற்றுதல் பாத்தில் தவம்.

விளக்கவுரை :

74. இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.

விளக்கவுரை :

75. அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறான நீக்கி - மறுவரவின்
மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன(து) அமைவு.

விளக்கவுரை :



ஏலாதி 66 - 70 of 80 பாடல்கள்

66. பொய்தீர் புலவர் பொருள்புரிந்து ஆராய்ந்த
மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர்
சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
இடரின்(று) இனிதுயிலும் இன்று.

விளக்கவுரை :

67. கூரம்பு வெம்மணல் ஈர்மணி தூங்கலும்
ஈரும் புகையிரு ளோ(டு)இருள்நூல் - ஆராய்ந்(து)
அழிகதி இம்முறையான் ஆன்றார் அறைந்தார்
இழிகதி இம்முறையான் ஏழு.

விளக்கவுரை :

68. சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல் புணர்வுலத்தல்
நோதல் பிரிவில் கவறலே - ஓதலின்
அன்புடையார்க்(கு) உள்ளன ஆறு குணமாக
மென்புடையார் வைத்தார் விரித்து.

விளக்கவுரை :

69. எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
படுத்தலோ(டு) ஆடல் பகரின் - அடுத்துயிர்
ஆறு தொழிலென்(று) அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து.

விளக்கவுரை :

70. ஐயமே பிச்சை அருந்தவர்க்(கு) ஊண்ஆடை
ஐயமே இன்றி அறிந்(து) ஈந்தான் - வையமும்
வானும் வரிசையால் தானாளும் நாளுமே
ஈனமே இன்றி இனிது.

விளக்கவுரை :



ஏலாதி 61 - 65 of 80 பாடல்கள்

61. ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால்
ஒர்வமே செய்யும் உலோபமே - சீர்சாலா
மானமே மேய உயிர்க்(கு)ஊனம் என்னுமே
ஊனமே தீர்ந்தவர் ஒத்து.

விளக்கவுரை :

62. கூத்தும் விழவும் மணமும் கொலைக்களமும்
ஆர்த்த முனையுள்ளம் வேறிடத்தும் - ஒத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கம் இழவும் தரும்.

விளக்கவுரை :

63. ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திலை மாணொடு
கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்(கு)ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து.

விளக்கவுரை :

64. உயர்ந்தான் தலைவனென்(று) ஒப்புடைத்தான் நோக்கி
உயர்ந்தான்நூல் ஓதி ஒடுங்கி - உயர்ந்தான்
அருந்தவம் ஆற்றச் செயின்வீடாம் என்றார்
பெருந்தவம் செய்தார் பெரிது.

விளக்கவுரை :

65. காலனார் ஈடறுத்தால் காண்குறின் முற்றுணர்ந்த
பாலனார் நூலமர்ந்து பாராது - வாலிதா
ஊறுபா(டு) இல்லா உயர்தவம் தான்புரியின்
ஏறுமோ மேலுலகம் ஓர்ந்து.

விளக்கவுரை :
Powered by Blogger.