சீவக சிந்தாமணி 2881 - 2885 of 3145 பாடல்கள்
2881. மெய்ப்படு முது புண் தீர்ப்பான் மேவிய முயற்சி போல
ஒப்புடைக் காமம் தன்னை உவர்ப்பினோடு ஒழித்துப் பாவம்
இப்படித்து இது என்று அஞ்சிப் பிறவி நோய் வெருவினானே
மைப்படு மழைக் கண் நல்லார் வாய்க் கொண்ட அமுதம் ஒப்பான்
விளக்கவுரை :
2882. ஆளியால் பாயப் பட்ட அடு களி யானை போல
வாளி வில் தடக்கை மைந்தன் வாய் விட்டு புலம்பிக் காம
நாளினும் நஞ்சு துய்த்தேன் நச்சு அறை ஆக நன் பொன்
தோளியர்த் துறந்து தூய்தாத் தவம் செய்வல் அடிகள் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2883. சிறுவன் வாய் மொழியைக் கேட்டே தேர் மன்னன் தானும் சொன்னான்
உறு களிற்று உழவ மற்று உன் ஒளி முடித் தாயம் எய்தி
அறை கடல் வேலி காத்து உன் அலங்கல் வேல் தாயம் எல்லாம்
பெறு தகு புதல்வற்கு ஈந்து பின்னை நீ துறத்தி என்றான்
விளக்கவுரை :
2884. கொலைச் சிறை உய்ந்து போகும் ஒருவனைக் குறுக ஓடி
அலைத்தனர் கொண்டு பற்றி அருஞ் சிறை அழுத்துகின்றார்
தொலைப்ப அருஞ் சுற்றத்தாரோ பகைவரோ அடிகள் என்ன
விலைப் பெரு மணியை முந்நீர் நடுக்கடல் வீழ்த்தது ஒத்தான்
விளக்கவுரை :
2885. காதலம் அல்லம் மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள்
ஏதிலம் யாங்கள் எல்லாம் இனிக் கொளும் உடம்பினானும்
ஆதலால் சுற்றம் இல்லை அது பட்டவாறு என்று அம் பூந்
தாது அலர் மார்பன் அற்புத் தளை அறப் பரிந்திட்டானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2881 - 2885 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books