சீவக சிந்தாமணி 2836 - 2840 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2836 - 2840 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2836. இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள் மேல்
நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்னக்
கலம் கலந்து அகன்ற மார்பில் கற்பக மாலை தாழக்
விலங்கு அரசு அனைய காளை வேனில் வேந்து என்னச் சேர்ந்தான்

விளக்கவுரை :

2837. குண்டலம் குலவி மின்னப் பொன்னரி மாலை தாழத்
தெண் கடல் அமிர்தின் செய்த பாவையின் பாவை நிற்ப
விண்டு அலர் மாலை மார்பன் விதியினால் சென்று மாதோ
கண்டனன் கலந்த உள்ளம் காதலின் ஒருவர் ஆனார்

விளக்கவுரை :

[ads-post]

2838. கொதி நுனைக் காமன் அம்பு கொப்புளித்து உமிழ்ந்து காமம்
மதுநிறை பெய்து விம்மும் மணிக் குடம் இரண்டு போல
நுதி முகம் முத்தம் சூடி நோக்குநர் ஆவி வாட்ட
விதி முலை வெய்ய ஆகித் தாரொடு மிடைந்த அன்றே

விளக்கவுரை :

2839. இமைத்த நும் கண்கள் என்னை இகழ்ந்தனிர் என்று சீற
அமைத்து நின் அழகு கோலம் ஆர உண்டு அறுக்கல் ஆற்றாது
இமைத்தன வஞ்சி என்ன இளையவள் சிலம்பில் குஞ்சி
நமைத்த பூந் தாமம் தோய நகைமுக விருந்து பெற்றான்

விளக்கவுரை :

2840. இன் நகில் ஆவி விம்மும் எழு நிலை மாடம் சேர்ந்தும்
பொன் மலர்க் காவு புக்கும் புரிமணி வீணை ஓர்த்தும்
நல் மலர் நான வாவி நீர் அணி நயந்தும் செல்வத்
தொல் நலம் பருகிக் காமத் தொங்கலால் பிணிக்கப் பட்டார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books