சீவக சிந்தாமணி 3061 - 3065 of 3145 பாடல்கள்
3061. சீவகன் திருவினம் ஆக யாம் என
நா அகம் தழும்ப நின்று ஏத்தி நன்று அரோ
காவலன் ஆதியாக் கணங்கள் கை தொழப்
பாவம் இல் சுதன்மரால் பாடப் பட்டதே
விளக்கவுரை :
கேவலோற் பத்தி
3062. முல்லை சூழ் முல்லை வேலி முயலொடு கவரி மேயும்
கொல்லை சூழ் குன்றத்து உச்சிக் குருசில் நோற்று உயர்ந்த வாறும்
வில் உமிழ்ந்து இலங்கு மேனி விழுத் தவ நங்கை மார்கள்
மல்லல் அம் குமரர் வான் மேல் சென்றதும் வகுக்கல் உற்றேன்
விளக்கவுரை :
[ads-post]
3063. முழுதும் முந்திரிகைப் பழச் சோலைத் தேன்
ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தனத்
தொழுதிக் குன்றம் துளும்பச் சென்று எய்தினான்
பழுது இல் வாய் மொழிப் பண்ணவன் என்பவே
விளக்கவுரை :
3064. நணிதின் எண் வினை இன்னவை கண் நிறீஇக்
துணிய ஈர்ந்திடும் துப்பு அமை சிந்தையான்
மணியின் மேல் மணி கட்டியது ஒத்து அதற்கு
அணியும் ஆய் அலர் ஞாயிறும் ஆயினான்
விளக்கவுரை :
3065. குன்றின் வீழ் அருவிக் குரல் கோடு அணைச்
சென்று எலாத் திசையும் சிலம்பின் மிசை
நின்றனன் இறை வம்மின நீர் என
ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3061 - 3065 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books