சீவக சிந்தாமணி 2681 - 2685 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2681 - 2685 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2681. கூந்தல் இன் புகைக் குவவு மென் முலைச்
சாந்தம் ஏந்திய தமால மாலையும்
ஆய்ந்து தாங்கினார் அரவ மேகலை
காய்ந்து நித்திலம் கடிய சிந்தினார்

விளக்கவுரை :

2682. அளிந்த தீம் பழம் இஞ்சி ஆர்ந்த நீர்
விளைந்த வல் விளைவு அரிசி வேரியும்
வளைந்த மின் அனார் மகிழ்ந்து சண்பகம்
உளைந்து மல்லிகை ஒலியல் சூடினார்

விளக்கவுரை :









[ads-post]

2683. தொத்து உடை மலர்த் தொங்கல் கண் பொர
முத்து உடை முலைக் கண் கண் நொந்த என்று
எய்த்து அடிச் சிலம்பு இரங்கும் இன் குரல்
கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்ததே

விளக்கவுரை :

2684. பொன் பனிப்பு உறும் பொற்பினார் நலம்
அன்பன் இத்தலை அணங்க அத்தலை
முன் பனித் தலை முழுதும் நீங்கிப் போய்ப்
பின் பனித்தலை பேண வந்ததே

விளக்கவுரை :

2685. பின் பனி
வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண் மலர்க்
கள் செய் மாலையார் கண் கொளாத் துகில்
அள்ளி ஏந்திய அரத்த அல்குலார்
ஒள் எரிம் மணி உருவப் பூணினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books