சீவக சிந்தாமணி 2671 - 2675 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2671 - 2675 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2671. எழுத்தின் பாடலும் ஆடலும் என்று இவை
பழுத்த கற்பகப் பன் மணிக் கொம்பு அனார்
அழுத்தி அன்ன அணிவளைத் தோள் மிசைக்
கழிக்கும் ஐங் கணைக் காமற்கும் காமனே

விளக்கவுரை :

2672. கார்
நீர் துளும்பு வயிற்றின் நிழல் முகில்
பார் துளும்ப முழங்கலின் பல் கலை
ஏர் துளும்ப வெரீஇ இறைவன் தழீஇக்
கார் துளும்பு கொம்பின் கவின் எய்தினார்

விளக்கவுரை :

[ads-post]

2673. இழிந்து கீழ்நிலை இன் அகில் சேக்கை மேல்
கிழிந்து சாந்து அழியக் கிளர் மென் முலை
தொழிந்து மட்டு ஒழுகத் துதை தார் பொர
அழிந்த மேகலை அம் சிலம்பு ஆர்த்தவே

விளக்கவுரை :

2674. தேன் இறால் அன தீம் சுவை இன் அடை
ஆன் அறா முலைப் பால் அமுது அல்லது ஒன்
றானும் மேவலர் அச்சுறவு எய்திய
மான் அறா மட நோக்கியர் என்பவே

விளக்கவுரை :

2675. கூதிர்
கூதிர் வந்து உலாவலின் குவவு மென் முலை
வேது செய் சாந்தமும் வெய்ய தேறலும்
போது அவிழ் மாலையும் புகையும் சுண்ணமும்
காதலித்தார் கருங் குவளைக் கண்ணினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books