சீவக சிந்தாமணி 3076 - 3080 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3076 - 3080 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3076. தெளிவு அறுத்து எழுவர் பட்டார் ஈர் எண்மர் திளைத்து வீழ்ந்தார்
களிறு கால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர் களத்தின் உள்ளே
பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறுவகைத் துவர்ப்பும் பேசின்
அளிபடு சிந்தை என்னும் ஆழிவாய் வீழ்ந்த அன்றே

விளக்கவுரை :

3077. மயக்கப் போர் மன்னன் மக்கள் மந்திரியவரும் வீழ
வியப்புறு வேத வில்வாய் வேட்கை அம்பு எடுத்திட்டு எய்யக்
கலக்கம் இல் அசுபம் என்னும் குந்தத்தால் கணை பெய்ம் மாரி
விலக்கித் திண் வெறுப்பு வாளால் விரைந்து உயிர் அவனை உண்டான்

விளக்கவுரை :

[ads-post]

3078. கரும்பு எறி கடிகை போன்றும் கதலிகைப் போழ்கள் போன்றும்
அரும் பொறிப் பகைவர் தம்மை உறுப்பு அறத் துணித்தும் ஈர்ந்தும்
மருந்து எறி பிணியைக் கொல்லும் மருத்துவன் போன்று மாதோ
இருந்து எறிந்து எறியும் மூவர் மேல் படை இயற்றினானே

விளக்கவுரை :

3079. செழு மலர் ஆவி நீங்கும் எல்லையில் செறிந்து காயம்
கழுமிய உதிரம் போல இமைப்பினுள் கரந்து நீங்கக்
கொழுமலர்க் குவளைக் கண்ணிக் கூற்று உயிர் உண்பதே போல்
விழுமிய தெவ்வர் வாழ் நாள் வீழ்ந்து உக வெம்பினானே

விளக்கவுரை :

3080. குரோதனே மானன் மாயன் கூர்ப்புடை உலோபன் என்பார்
விரோதித்து விரலின் சுட்டி வெருவரத் தாக்க வீரன்
நிரோதனை அம்பின் கொன்றான் நித்தை நீள் பசலைப் பேரோர்
விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books