சீவக சிந்தாமணி 2971 - 2975 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2971 - 2975 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

நகர விலாவணை

2971. நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும்
நேர் நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம்
பார் நிறை அடிகில் பள்ளி தளியொடு சாலை எல்லாம்
ஊர் நிறை உயிர்த்தல் இன்றி உயிர் சென்ற போன்ற அன்றே

விளக்கவுரை :

2972. கோள் புலிச் சுழல் கண் அன்ன கொழுஞ் சுவைக் கருனை முல்லை
மோட்டு இள முகையின் மொய் கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு
ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி சுவைத் தயிரொடு ஏந்தி
வேட்டவரப் பெறாது வீதி வெறு நிலம் கிடந்த அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2973. மைந்தர் தம் வண்கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல்
பைந் துகில் மகளிர் மேவார் பாசிழை பசும் பொன் மாலை
சிந்தியே கரந்தார் சொல் போல் மெய்யின் கண் சேர்தல் இன்றாய்ச்
சந்தனச் சாந்தொடு ஆரம் தாம் கவின் இழந்த அன்றே

விளக்கவுரை :

2974. தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெருங் குவளைக் கண்ணார்
மூழி வாய் முல்லை மாலை முலைமுகம் முரிந்து நக்க
யாழின் வாய் முழவம் விம்ம ஆட்டு ஒழிந்து அயர்ந்து தீம் தேன்
ஊழி வாய்க் கொண்டது ஒக்கும் பாடலும் ஒழிந்தது அன்றே

விளக்கவுரை :

2975. அருங்கலம் நிறைந்த அம்பூம் பவழக்கால் திகழும் பைம்பொன்
பெருங் கிடுகு என்னும் கோலப் பேரிமை பொருந்தி மெல்ல
ஒருங்கு உடன் நகரம் எல்லாம் உறங்குவது ஒத்தது ஒல் என்
கருங் கடல் கல் என் சும்மை கரந்ததும் ஒத்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books