சீவக சிந்தாமணி 2646 - 2650 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2646 - 2650 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2646. அடிகளோ துறக்க ஒன்றும் உற்றவர் யாதும் அல்லர்
சுடு துயர் என்கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை
கொடியை நீ கொடிய செய்தாய் கொடியையோ கொடியை என்னா
இடர் உற்று ஓர் சிங்கம் தாய் முன் இருந்து அழுகின்றது ஒத்தான்

விளக்கவுரை :

2647. சென்றதோ செல்க இப்பால் திருமகள் அனைய நங்கை
இன்று இவள் துறப்ப யான் நின் அரசு உவந்து இருப்பேன் ஆயின்
என்று எனக்கு ஒழியும் அம்மா பழி என இலங்கு செம் பொன்
குன்று அனான் குளிர்ப்பக் கூறி கோயில் புக்கு அருளுக என்றான்

விளக்கவுரை :

[ads-post]

2648. பந்து அட்ட விரலினார் தம் படாமுலை கிழித்த பைந்தார்
நந்தட்டன் தன்னை நோக்கி நங்கையார் அடிகள் சொன்னார்
நொந்திட்டு முனிய வேண்டா துறந்திலம் நும்மை என்னக்
கந்து அட்ட திணி திண் தோளான் கற்பகம் மலர்ந்தது ஒத்தான்

விளக்கவுரை :

2649. துறந்த இந் நங்கைமார் தம் தூ மலர் அனைய பாதம்
உறைந்த என் சென்னிப் போதின் மிசைய என்று ஒப்ப ஏத்திக்
கறந்த பால் அனைய கந்திக் கொம்பு அடுத்து உருவப் பைம் பூண்
பிறங்கு தார் மார்பன் போந்து பெரு மணக் கோயில் புக்கான்

விளக்கவுரை :

2650. வடி நிரை நெடிய கண்ணார் மாமிமார் விடுப்ப ஏகிக்
கடி நிரை சிவிகை ஏறிக் கதிர் மணிக் குடை பின் செல்ல
உடை திரைப் பரவை அன்ன ஒளிறு வேல் மறவர் காப்பக்
கொடி நிரைக் கோயில் புக்கார் குங்குமக் கொடி அனாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books