சீவக சிந்தாமணி 2656 - 2660 of 3145 பாடல்கள்
2656. தூமலர் மாலை வாளாச் சுரும்பு எழப் புடைத்தும் தேன் சோர்
தாமரைச் சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும்
காமரு கணையம் ஆகக் கண்ணிகள் ஒழுக விட்டும்
தோமரம் ஆகத் தொங்கல் சிதறுபு மயங்கினாரே
விளக்கவுரை :
2657. அரக்கு நீர்ச் சிவிறி ஏந்தி ஆயிரம் தாரை செல்லப்
பரப்பினாள் பாவை தத்தை பைந் தொடி மகளிர் எல்லாம்
தரிக்கிலர் ஆகித் தாழ்ந்து தட முகில் குளிக்கும் மின் போல்
செருக்கிய நெடுங் கண் சேப்பச் சீத நீர் மூழ்கினாரே
விளக்கவுரை :
[ads-post]
2658. தானக மாடம் ஏறித் தையலார் ததும்பப் பாய்வார்
வான் அகத்து இழியும் தோகை மட மயில் குழாங்கள் ஒத்தார்
தேன் இனம் இரியத் தெண் நீர் குளித்து எழும் திருவின் அன்னார்
பால் மிசைச் சொரியும் திங்கள் பனிக் கடல் முளைத்தது ஒத்தார்
விளக்கவுரை :
2659. கண்ணி கொண்டு எறிய அஞ்சிக் கால் தளர்ந்து அசைந்து சோர்வார்
சுண்ணமும் சாந்தும் வீழத் தொழுதனர் இரந்து நிற்பார்
ஒண் மலர் மாலை ஓச்ச ஒசிந்து கண் பிறழ ஒல்கி
வெண்ணெயின் குழைந்து நிற்பார் வேல் கணார் ஆயினாரே
விளக்கவுரை :
2660. கூந்தலை ஒருகை ஏந்திக் குங்குமத் தாரை பாயப்
பூந்துகில் ஒருகை ஏந்திப் புகும் இடம் காண்டல் செல்லார்
வேந்தனைச் சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கிக்
காய்ந்து பொன் சிவிறி ஏந்திக் கார் மழை பொழிவது ஒத்தான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2656 - 2660 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books