சீவக சிந்தாமணி 2771 - 2775 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2771 - 2775 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2771. பாரகம் கழுநர் போலப் பரூஉத் தடி பலரும் ஏந்தி
வீர நோய் வெகுளி தோற்றி விழுப்பு அற அதுக்கி இட்டுக்
காரகல் பொரிப்பர் கண்ணுள் சுரிகையை நடுவர் நெஞ்சில்
பாரக் கூர்ந்தறிகள் நட்டுப் பனை எனப் பிளப்பர் மாதோ

விளக்கவுரை :

2772. நாப் புடை பெயர்த்தல் ஆற்றார் நயந்து நீர் வேட்டு நோக்கிப்
பூப்புடை அணிந்த பொய்கை புக்கு நீர் உண்ணல் உற்றால்
சீப்படு குழம்பது ஆகிச் செல்லல் உற்று அந்தோ என்னக்
கூப்பிடு குரலாய் நிற்பர் குறைப் பனைக் குழாங்கள் ஒத்தே

விளக்கவுரை :

[ads-post]

2773. நறு மலர்த் தாமம் நான்று நான நீர் பிலிற்றும் பந்தர்க்
குறுகலும் குட நெய் பெய்த கொந்து அழல் போன்று பொங்கிப்
பறை அலகு அனைய வெண்பல் பசுங் கழல் குண்டு பைங்கண்
உறு துயர் நரகர் தம்மை உருகச் சுட்டிடுங்கள் அன்றே

விளக்கவுரை :

2774. வெந்து உருக்கு உற்ற செம்பின் விதவையுள் அழுத்தி இட்டும்
எந்திர ஊசல் ஏற்றி எரி உண மடுத்தும் செக்கில்
சுந்து எழுந்து அரைத்தும் போகச் சுண்ணம் ஆ நுணுக்கி இட்டும்
மந்தரத்து அனைய துன்பம் வைகலும் உழப்ப மாதோ

விளக்கவுரை :

2775. உழும் பகட்டு எருது போல உரன் அறு தாளர் ஆகிக்
கொழுங் களி அளற்றுள் வீழ்ந்தும் கொழும் புகை மடுக்கப் பட்டும்
அழுந்தும் இந் நரகம் தன்னுள் செல்பவர் யார் கொல் என்னின்
எழுந்து வண்டு இமிரும் பைந்தார் இறைவ நீ கேண்மோ என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books