சீவக சிந்தாமணி 3101 - 3105 of 3145 பாடல்கள்
3101. பரிநிர்வாணம்
இகல் இருள் முழு முதல் துமிய ஈண்டு நீர்ப்
பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின்
இகல் இரு மரை மலர் அளித்த சேவடி
தொகல் அருங் கருவினை துணிக்கும் எஃகமே
விளக்கவுரை :
3102. மீன் தயங்கு திங்கள் முக நெடுங் கண் மெல் இயலார்
தேன் தயங்கு செந் நாவின் சில் மென் கிளிக் கிளவி
வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி அரோ
கான் தயங்கி நில்லா கருவினை கால் பெய்தனவே
விளக்கவுரை :
[ads-post]
3103. மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல்
பொதி அவிழ்ந்து தேன் துளிப்ப போன்று பொரு இல்லார்
விதியின் களித்தார் அறிவன் விழுக் குணங்கள் ஏத்தித்
துதியின் தொழுதார் துளங்கு உள்ளம் அது நீத்தார்
விளக்கவுரை :
3104. ஆர்ந்த குணச் செல்வன் அடித் தாமரைகள் ஏத்திச்
சேர்ந்து தவ வீரர் திசை சிலம்பத் துதி ஓதித்
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார்
கூர்ந்து அமிழ்த மாரி எனக் கொற்றவனும் சொன்னான்
விளக்கவுரை :
3105. இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றித்
துன்பத்தைச் சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி
நின்ற பற்று ஆர்வம் நீக்கி நிருமலன் பாதம் சேரின்
அன்பு விற்று உண்டு போகிச் சிவகதி அடையலாமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3101 - 3105 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books