சீவக சிந்தாமணி 2651 - 2655 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2651 - 2655 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2651. முழுது உலகு எழில் ஏத்தும் மூரி வேல் தானை மன்னன்
தொழு தகு பெருமாட்டி தூமணிப் பாவை அன்னாள்
பொழி தரு மழை மொக்குள் போகம் விட்டு ஆசை நீக்கி
வழி வரு தவம் எய்தி வைகினள் தெய்வம் அன்னாள்

விளக்கவுரை :

நீர் விளையாட்டு அணி

2652. உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்
படர் கதிர்த் திங்கள் ஆகப் பரந்துவான் பூத்தது என்னா
அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன்
குடை கெழு வேந்தற்கு இப்பால் உற்றது கூறல் உற்றேன்

விளக்கவுரை :

[ads-post]

2653. துறவின் பால் படர்தல் அஞ்சித் தொத்து ஒளி முத்துத் தாமம்
உறைகின்ற உருவக் கோலச் சிகழிகை மகளிர் இன்பத்து
இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் அமைச்சர் எண்ணி
நிறைய நீர் வாவி சாந்தம் கலந்து உடன் பூரித்தாரே

விளக்கவுரை :

2654. நீர் அணி மாட வாவி நேர்ம் புணை நிறைத்து நீள் நீர்ப்
போர் அணி மாலை சாந்தம் புனை மணிச் சிவிறி சுண்ணம்
வார் அணி முலையினார்க்கும் மன்னர்க்கும் வகுத்து வாவி
ஏர் அணி கொண்ட இந் நீர் இறைவ கண்டு அருளுக என்றார்

விளக்கவுரை :

2655. கணமலை அரசன் மங்கை கட்டியங்காரன் ஆகப்
பணை முலை மகளிர் எல்லாம் பவித்திரன் படையது ஆக
இணை மலர் மாலை சுண்ணம் எரி மணிச் சிவிறி ஏந்திப்
புணை புறம் தழுவித் தூநீர்ப் போர்த் தொழில் தொடங்கினாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books