சீவக சிந்தாமணி 3136 - 3140 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3136 - 3140 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3136. காது அணிந்த தோடு ஒரு பால் மின்னு வீசக் கதிர் மின்னுக் குழை ஒரு பால் திருவில் வீசத்
தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோரத் தாமரைக் கண் தாம் இரங்கப் புருவம் ஆட
மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலைக் கிண்கிணியும் சிலம்பும் ஏங்கப்
போது அணிந்த தார் உடையப் பொருது பொங்கிப் புணர்முலைகள் போர்க்களம் தாம் கண்ட அன்றே

விளக்கவுரை :

3137. முழுது ஆரம் மின்னும் முலைக் குவட்டினால் மொய்ம் மார்பில் குங்குமச் சேறு இழுக்கி வீழ
உழுது ஆர்வம் வித்தி உலப்பு இலாத நுகர்ச்சி விளைத்து அலர்ந்த கற்பகத்தின் கீழ்
எழுது ஆர் மணிக் குவளைக் கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து
இழுதார் மென் பள்ளிப் பூந் தாது பொங்க இருவர் பாலர் ஆகி இன்புறுபவே

விளக்கவுரை :

[ads-post]

3138. மண் கனிந்த பொன் முழவ மழையின் விம்ம மாமணியாழ் தீம் குழல்கள் இரங்கப் பாண்டில்
பண் கனியப் பாவைமார் பைம் பொன் தோடும் குண்டலமும் தாம் பதைப்ப இருந்து பாட
விண் கனியக் கிண் கிணியும் சிலம்பும் ஆர்ப்ப முரிபுருவ வேல் நெடுங் கண் விருந்து செய்யக்
கண் கனிய நாடகம் கண்டு அமரர் காமக் கொழுந்து ஈன்று தம் தவம் தாம் மகிழ்ந்தார் அன்றே

விளக்கவுரை :

3139. முருகு உடைந்த பூங் கோதை முத்து அணிந்த தோளார்
ஒரு குடங்கைக் கண்ணால் உளம் கழிய ஏவுண்டு
அருகு அடைந்த சாந்து அழிய அம் முலை மேல் வீழ்ந்தார்
திரு அடைந்த நீள் மார்பின் தேன் துளிக்கும் தாரார்

விளக்கவுரை :

3140. நிலவி ஒளி உமிழும் நீள் இலை வேல் கண்ணார்
கலவித் தூது ஆகிய காமக்கை காய்த்திப்
புலவிப் படை பயிலப் பூச் செய்த கோலம்
உலவித் துறக்கம் ஒளி பூத்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books