சீவக சிந்தாமணி 2891 - 2895 of 3145 பாடல்கள்
2891. மஞ்சு இவர் மணி வரை அனைய மாதவன்
வஞ்சம் இல் அறவுரை பொதிந்த வாய் மொழி
அஞ்சினன் இருந்துழி அம்பு வீழ்ந்து என
நஞ்சு உமிழ் வேலினான் நடுங்க வீழ்ந்ததே
விளக்கவுரை :
2892. வார் அணி மணித் துடி மருட்டும் நுண் இடைக்
கார் அணி மயில் அனார் சூழக் காவலன்
ஏர் அணி மணி முடி இறைஞ்சி ஏத்தினான்
சீர் அணி மாதவர் செழும் பொன் பாதமே
விளக்கவுரை :
[ads-post]
2893. நலத் திரு மட மகள் நயந்த தாமரை
நிலத்து இருந்து இரு சுடர் நிமிர்ந்து செல்வ போல்
உலப்பு அருந் தவத்தினால் ஓங்கு சாரணர்
செலத் திரு விசும்பு ஒளி சிறந்தது என்பவே
விளக்கவுரை :
தாயத் தீர்வு
2894. சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய
வார் அணி வன முலை வஞ்சிக் கொம்பு அனார்
போர் அணி புலவு வேல் கண்கள் பூத்தன
நீர் அணி குவளை நீர் நிறைந்த போன்றவே
விளக்கவுரை :
2895. பொன் வரை நிலாக் கதிர் பொழிந்து போர்த்த போல்
தென் வரைச் சந்தனம் திளைக்கும் மார்பினான்
மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
இன் உரை கொடான் கொடிக் கோயில் எய்தினான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2891 - 2895 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books