சீவக சிந்தாமணி 2761 - 2765 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2761 - 2765 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2761. தேம் கொள் பூம் கண்ணித் திருமுடித் திலக வெண் குடையோய்
ஈங்கு இது அன்றியும் இமையவர் அமையலர்க் கடந்த
தாங்கும் மா வண்கைச் சக்கரம் மிக்கு உயர் பிறரும்
யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய்

விளக்கவுரை :

நரக கதித் துன்பம்

2762. வெவ்வினை செய்யும் மாந்தர் உயிர் எனும் நிலத்து வித்தி
அவ் வினை விளையுள் உண்ணும் அவ்விடத்து அவர்கள் துன்பம்
இவ் என உரைத்தும் என்று நினைப்பினும் பனிக்கும் உள்ளம்
செவ்விதின் சிறிது கூறக் கேள் மதி செல்வ வேந்தே

விளக்கவுரை :

[ads-post]

2763. ஊழ் வினை துரப்ப ஓடி ஒன்றும் மூழ்த்தத்தின் உள்ளே
சூழ் குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து
வீழ்வன போல வீழ்ந்து வெருவரத் தக்க துன்பத்து
ஆழ் துயர் உழப்ப ஊணும் அருநவை நஞ்சு கண்டாய்

விளக்கவுரை :

2764. இட்டி வேல் குந்தம் கூர் வாள் எரிநுனைச் சுரிகை கூட
நட்டவை நிரைத்த பூமி நவை உடை நரகர் பொங்கி
உட்பட எழுந்து வீழ்ந்து ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம்
எட்டு எலாத் திசையும் சிந்திக் கிடப்பவால் அடக்கம் இல்லார்

விளக்கவுரை :

2765. வெம் தடி தின்ற வெம் நோய் வேகத்தால் மீட்டு மாலைப்
பைந் தொடி மகளிர் ஆடும் பந்து என எழுந்து பொங்கி
வந்து உடைந்து உருகி வீழ்ந்து மாழ்குபு கிடப்பர் கண்டாய்
கந்து அடு வெகுளி வேகக் கடா முகக் களிற்று வேந்தே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books