சீவக சிந்தாமணி 2731 - 2735 of 3145 பாடல்கள்
2731. நடுச் சிகை முத்துத் தாமம் வாள் நுதல் நான்று நக்கப்
படுத்தனர் பைம் பொன் கட்டில் பாடினார் கீதம் தூபம்
எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த
கொடிப் பல பூத்துச் சூழ்ந்த குங்குமக் குன்றம் ஒத்தான்
விளக்கவுரை :
2732. மௌளவே புருவம் கோலி விலங்கிக் கண் பிறழ நோக்கி
முள் எயிறு இலங்கச் செவ்வாய் முறுவல் தூது ஆதி ஆக
அள்ளிக் கொண்டு உண்ணக் காமம் கனிவித்தார் பனிவில் தாழ்ந்த
வள் இதழ் மாலை மார்பன் வச்சிர மனத்தன் ஆனான்
விளக்கவுரை :
[ads-post]
2733. முலை முகம் சுமந்த முத்தத் தொத்து ஒளிர் மாலையாரும்
மலை முகந்த அனைய மார்பின் மன்னனும் இருந்த போழ்தில்
கொலை முகக் களிறு அனாற்கு நாழிகை சென்று கூறக்
கலைமுக மல்லர் புல்லிக் கமழும் நீர் ஆட்டினாரே
விளக்கவுரை :
2734. வெண் துகில் மாலை சாந்தம் விழுக்கலம் வீதியில் சேர்த்தி
நுண் துகில் திரைகள் சேர்ந்த நூற்று உலா மண்டபத்துக்
கண் திரள் முத்தம் மென் தோள் காவிக் கண் மகளிர் போற்றி
எண் திசை மருங்கும் ஏத்த இனிதினின் ஏறினானே
விளக்கவுரை :
2735. நெய் வளம் கனிந்து வாசம் நிறைந்து வான் வறைகள் ஆர்ந்து
குய் வளம் கழுமி வெம்மைத் தீம் சுவை குன்றல் இன்றி
ஐவருள் ஒருவன் அன்ன அடிசில் நூல் மடையன் ஏந்த
மை வரை மாலை மார்பன் வான் சுவை அமிர்தம் உண்டான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2731 - 2735 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books