சீவக சிந்தாமணி 3131 - 3135 of 3145 பாடல்கள்
3131. வெம்மை கொண்ட தேன் அமிர்தம் மெல்லவே
அம்மை அம் சொலார் ஆர உண்டவர்
தம்மைத் தாம் மகிழ்ந்து உறைய இத்தலைச்
செம்மை மாதவர்க்கு உற்ற செப்புவாம்
விளக்கவுரை :
3132. நந்தட்டன் தோழன்மார் நோற்று உயர்வு
நாள் கண் கூடிய நகை வெண் திங்கள் போல்
காளை நந்தனும் தோழன் மார்களும்
நாளும் நாளினும் நடுங்க நல்தவம்
தாளின் ஈட்டினார் தம்மைத் தாம் பெற்றார்
விளக்கவுரை :
[ads-post]
3133. பாவனை மரீஇப் பட்டினி யொடும்
தீ வினை கழூஉம் தீர்த்தன் வந்தியாப்
பூ உண் வண்டு அன கொட்பின் புண்ணியர்
நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார்
விளக்கவுரை :
3134. கருவில் கட்டிய காலம் வந்தென
உருவ வெண் பிறைக் கோட்டின் ஓங்கிய
அருவிக் குன்றின் மேல் முடித்திட்டு ஐவரும்
திருவின் தோற்றம் போல் தேவர் ஆயினார்
விளக்கவுரை :
3135. அனங்கனைத் தவம் செய அழன்று கண்டவர்
மனங்களைக் கவர்ந்திடும் மணிக் கண் வெம் முலைப்
பொனம் கொடி மயில் அனார்ப் புல்ல மாப் பிடி
இனம் பயில் கடாக் களிற்று இன்பம் எய்தினார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3131 - 3135 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books