சீவக சிந்தாமணி 2751 - 2755 of 3145 பாடல்கள்
2751. வில்லின் மாக் கொன்று வெள் நிணத் தடி விளிம்பு அடுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல் குலம் பெறுதலும் நரபதி அரிதே
விளக்கவுரை :
2752. கருவி மா மழை கனை பெயல் பொழிந்து என வழிநாள்
அருவி போல் தொடர்ந்து அறாதன அரும் பிணி அழலுள்
கருவில் காய்த்திய கட்டளைப் படிமையில் பிழையாது
உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிதே
விளக்கவுரை :
[ads-post]
2753. காமன் அன்னது ஓர் கழிவனப்பு அறிவொடு பெறினும்
நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி
வாமன் நூல் நெறி வழு அறத் தழுவினர் ஒழுகல்
ஏம வெண் குடை இறைவ மற்று யாவதும் அரிதே
விளக்கவுரை :
நிலையாமை
2754. இன்ன தன்மையின் அருமையின் எய்திய பொழுதே
பொன்னும் வெள்ளியும் புணர்ந்து என வயிற்று அகம் பொருந்தி
மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும்
பின்னை வெண்ணெயின் திரண்ட பின் பிழைக்கவும் பெறுமே
விளக்கவுரை :
2755. வெண்ணெய் ஆயது வீங்குபு கூன் புற யாமை
வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் அது வழுக்காது
ஒண்மை வாள் மதி உருவொடு திரு எனத் தோன்றிக்
கண் அனார் அழக் கவிழினும் கவிழும் மற்று அறி நீ
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2751 - 2755 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books