சீவக சிந்தாமணி 2766 - 2770 of 3145 பாடல்கள்
2766. வயிர முள் நிரைத்து நீண்ட வார்சினை இலவம் ஏற்றிச்
செயிரில் தீ மடுப்பர் கீழால் செல்நுனைக் கழுவில் ஏற்றி
மயிருக்கு ஒன்று ஆக வாங்கி அகைத்து அகைத்திடுவர் மன்னா
உயிரைப் பேது உறுத்தும் மாந்தர் உயிரைப் பேதுறுக்கும் ஆறே
விளக்கவுரை :
2767. துடிக் குரல் குரல பேழ்வாய்த் தொடர்ப் பிணி உறுத்த செந்நாய்
மடுத்திட வைர ஊசி வாள் எயிறு அழுந்தக் கௌவிப்
புடைத்திட அலறி ஆற்றார் பொன்றினும் பொன்றல் செல்லார்
உடுப்பு இனம் வேட்டம் செய்தார் உழப்பவால் துன்பம் மாதோ
விளக்கவுரை :
[ads-post]
2768. வாளை மீன் தடிகள் தின்றார் வருக என உருக வெந்த
பாளத்தைக் கொடிற்றின் ஏந்திப் பகுத்து வாய் புகுத்தல் ஆற்றார்
ஊளைக் கொண்டு ஓடுகின்றார் உள் அடி ஊசி பாயத்
தாள் ஒற்றித் தப்பி வீழ்ந்தார் தறிவலை மானின் பட்டார்
விளக்கவுரை :
2769. காதலாள் கரிந்து நையக் கடியவே கனைந்து கன்றி
ஏதிலான் தாரம் நம்பி எளிது என இறந்த பாவத்து
ஊது உலை உருக வெந்த ஒள் அழல் செப்புப் பாவை
ஆ தகாது என்னப் புல்லி அலறுமால் யானை வேந்தே
விளக்கவுரை :
2770. சிலையினால் மாக்கள் கொன்று செழுங் கடல் வேட்டம் ஆடி
வலையினால் மீன்கள் வாரி வாழ் உயிர்க் கூற்றம் ஆன
கொலைநரைக் கும்பி தன்னுள் கொந்து அழல் அழுத்தி இட்டு
நலிகுவர் நாளும் நாளும் நரகரை நாம வேலோய்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2766 - 2770 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books