சீவக சிந்தாமணி 2691 - 2695 of 3145 பாடல்கள்
2691. இளி வாய்ப் பிரசம் யாழ் ஆக இரும் கண் தும்பி குழல் ஆகக்
களிவாய்க் குயில்கள் முழவு ஆகக் கடிபூம் பொழில்கள் அரங்கு ஆகத்
தளிர் போல் மடவார் தணந்தார் தம் தடம் தோள் வளையும் மாமையும்
விளியாக் கொண்டு இங்கு இள வேனில் விருந்தா ஆடல் தொடங்கினான்
விளக்கவுரை :
2692. வேனில் ஆடும் விருப்பினால் வியன் காய் நெல்லிச் சாந்து அரைத்து
நான எண்ணெய் கதுப்பு உரைத்து நறுநீர் ஆடி அமிர்து உயிர்க்கும்
தேன் ஆர் அகிலின் புகை சேர்த்தி வகுத்து நாவிக் குழம்பு உறீஇ
ஆனாப் பளித நறுஞ் சுண்ணம் உகிரின் உழுது ஆங்கு அணிந்தாரே
விளக்கவுரை :
[ads-post]
2693. முத்தார் மருப்பின் இடை வளைத்த முரண் கொள் யானைத் தடக்கையின்
ஒத்தேர் உடைய மல்லிகையின் ஒலியல் மாலை உறுப்பு அடக்கி
வைத்தார் மணி நூற்றன ஐம்பால் வளைய முடித்து வான் கழுநீர்
உய்த்து ஆங்கு அதனுள் கொள அழுத்திக் குவளை செவித் தாது உறுத்தாரே
விளக்கவுரை :
2694. புகை ஆர் வண்ணப் பட்டு உடுத்துப் பொன் அம் கலைகள் புறம் சூழ்ந்து
நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் நாய் நாச் சீறடி மேல்
பகை கொண்டார் போல் சுமாஅய்க் கண்பின் பரூஉக் காம்பு அனைய கணைக் கால் சூழ்ந்து
அகை ஆர்ந்து இலங்கும் பரியகம் தாமே கவினச் சேர்த்தினார்
விளக்கவுரை :
2695. பிடிக்கை வென்று கடைந்தன போல் பஞ்சி ஆர்ந்த திரள் குறங்கு
கடித்துக் கிடந்து கவின் வளரும் காய் பொன் மகரம் கதிர் முலை மேல்
உடுத்த சாந்தின் மிசைச் செக்கர் ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்பத்
துடிக்கும் கதிர் சேர் துணை முத்தம் திருவில் உமிழ்ந்து சுடர்ந்தனவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2691 - 2695 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books