சீவக சிந்தாமணி 2746 - 2750 of 3145 பாடல்கள்
2746. பால் கடல் பனி மதி பரவைத் தீம் கதிர்
மேல் பட மிக நனி சொரிவது ஒப்பவே
நூல் கடன் மாதவன் நுனித்த நல் அறம்
கோல் கடன் மன்னனுக்கு உரைக்கும் என்பவே
விளக்கவுரை :
2747. தேன் நெய் தோய்ந்தன தீவிய திருமணி அனைய
வானின் உய்ப்பன வரகதி தருவன மதியோர்
ஏனை யாவரும் அமுது எனப் பருகுவ புகல்வ
மானம் இல் உயர் மணி வண்ணன் நுவலிய வலித்தான்
விளக்கவுரை :
[ads-post]
2748. அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும்
திரு மெய் நீங்கிய துன்பமும் தெளி பொருள் துணிவும்
குருமை எய்திய குண நிலை கொடை பெறு பயனும்
பெருமை வீட்டொடும் பேசுவல் கேள் இது பெரியோய்
விளக்கவுரை :
பெறுதற்கு அருமை
2749. பரவை வெண் திரை வட கடல் படுநுகத் துளையுள்
திரை செய் தென் கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி
அரச அத்துளை அக வயின் செறிந்து என அரிதால்
பெரிய யோனிகள் பிழைத்து இவண் மானிடம் பெறலே
விளக்கவுரை :
2750. விண்டு வேய் நரல் ஊன் விளை கானவர் இடனும்
கொண்டு கூர்ம் பனி குலைத்திடும் நிலைக்களக் குறும்பும்
உண்டு நீர் என உரையினும் அரியன ஒருவி
மண்டு தீம் புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிதே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2746 - 2750 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books