சீவக சிந்தாமணி 3011 - 3015 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3011 - 3015 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3011. மணி வரை எறி திரை மணந்து சூழ்ந்த போல்
அணி மயிர்க் கவரிகள் அமரர் ஏந்தினார்
துணி மணி முக்குடை சொரிந்த தீம் கதிர்
பணி மணிக் கார் இருள் பருகு கின்றதே

விளக்கவுரை :

3012. முழாத் திரள் மொய்ம் மலர்த் தாமம் தாழ்ந்து மேல்
வழாத் திரு மலர் எலாம் மலர்ந்து வண்டு இனம்
குழாத்தொடும் இறை கொளக் குனிந்து கூய்க் குயில்
விழாக் கொள விரிந்தது வீரன் பிண்டியே

விளக்கவுரை :

[ads-post]

3013. பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட
விண்டு அலர் கனை கதிர் வீரன் தோன்றினான்
உண்டு இவண் அற அமிர்து உண்மினோ எனக்
கொண்டன கோடணை கொற்ற முற்றமே

விளக்கவுரை :

3014. வானவர் மலர் மழை சொரிய மன்னிய
ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன்
தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி
கோன் அமர்ந்து ஏத்திய குறுகினான் அரோ

விளக்கவுரை :

3015. குரு குலம் சீவக குமரன் கோத்திரம்
அருகல் இல் காசிபம் அடிகள் வாழி என்று
எரி மணி முடி நிலம் உறுத்தி ஏத்தினான்
புரி மணி வீணைகள் புலம்ப என்பவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books