வளையாபதி 1 - 5 of 73 பாடல்கள்

வளையாபதி 1 - 5 of 73 பாடல்கள்

valayapathi

கடவுள் வாழ்த்து

1. உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல் அறி வன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்.

விளக்கவுரை :

[இளம்பூரனார் தொல்காப்பிய உரையில் செய்யுளியல் 98ஆம் நூற்பாவுக்கும், யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையாசிரியர் 37-ஆம் நூற்பாவுக்கும் நூற்பெயரைக் குறிப்பிடாமல் மேற்கோளாக இச் செய்யுளைக் காட்டியுள்ளனர். நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் செய்யுளியல் 148ஆம் நூற்பாவின் உரையில் இப்பாடல் வளைபதிச் செய்யுள் எனக் கூறப்பட்டுள்ளது.]

[பின் வரும் 66 பாடல்கள் புறத் திரட்டிலிருந்து தொகுக்கப் பட்டவை]

2. வினைபல வலியி னாலே வேறுவேறு யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரியதாகும் தோன்றுதல்; தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம்.

விளக்கவுரை :


[ads-post]

3. உயர்குடி நனிஉள் தோன்றல் ஊனமில் யாக்கை ஆதல்
மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல்
பெரிதுணர் அறிவே யாதல் பேரறம் கோடல் என்றாங்கு
அரிதிவை பெறுக லோடே பெற்றவர் மக்கள் என்பார்.

விளக்கவுரை :

4. நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும்
பீடுறும்மழை பெய்கஎனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே.

விளக்கவுரை :

5. பள்ள முதுநீர்ப் பழகினும் மீன்இனம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்
கள்ளவிழ் கோதையர் காமனோடு ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ.

விளக்கவுரை :

வளையாபதி, valayaapathi, tamil books