Showing posts with label சோழன் நல்லுத்திரன். Show all posts



கலித்தொகை 117 of 150 தொகைகள்

117. மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
கையது எவன்? மற்று உரை.

விளக்கவுரை :

'கையதை - சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர்
போழில் புனைந்த வரிப் புட்டில்' - 'புட்டில் உள் என் உள?
காண்தக்காய்! என் காட்டிக் காண்.'

விளக்கவுரை :

காண், இனி; தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு
காட்டுச் சார் கொய்த சிறு முல்லை, மற்று இவை.
முல்லை இவை ஆயின் - முற்றிய கூழையாய்!
எல்லிற்றுப் போழ்து ஆயின் - ஈதோளிக் கண்டேனால்;
'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு
மெல்லியது, ஓராது அறிவு.

விளக்கவுரை :



கலித்தொகை 116 of 150 தொகைகள்

116. பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ
என்னையே முற்றாய் விடு.

விளக்கவுரை :

விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில்
நீங்கிச் சினவுவாய் மற்று.

விளக்கவுரை :

நீ நீங்கு, கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு;
யாய் வருக ஒன்றோ, பிறர் வருக; மற்று நின்
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்க பெறின்.

விளக்கவுரை :

நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! -
கலத்தொடு யாம் செல்வுழி நாடிப், புலத்தும்
வருவையால் - நாண் இலி! நீ.

விளக்கவுரை :



கலித்தொகை 115 of 150 தொகைகள்

115. தோழி! நாம், காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூர
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்
கரந்ததூஉம் கையொடு கோள் பட்டாம், கண்டாய்; நம்
புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ.

விளக்கவுரை :

அதனை வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள்;
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப்புறங்கடை போயினாள். யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூம் கரை நீலம் தழீஇத், தளர்பு ஒல்கிப்,
பாங்கரும் கானத்து ஒளித்தேன். - அதற்கு, எல்லா
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் - அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும்
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை. அகல் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம்
அல்கலும் சூழ்ந்த வினை!

விளக்கவுரை :



கலித்தொகை 114 of 150 தொகைகள்

114. வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ...
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரை கண்டு, 'மதி அறியா
ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ -
தோழி! - அவன் உழைச் சென்று
சென்று யான் அறிவேன்; கூறுக. மற்று இனி.
'சொல் அறியாப் பேதை - மடவை! - மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
நினக்கு வருவதாக் காண்பாய். அனைத்து ஆகச்
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு.

விளக்கவுரை :

தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய -
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ... அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?

விளக்கவுரை :
Powered by Blogger.