சீவக சிந்தாமணி 2576 - 2580 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2576 - 2580 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2576. பஞ்சி சூழ் அல்குல் பல் வளை வீங்கு தோள்
வஞ்சி நுண் இடை வம்பு அணி வெம் முலை
விஞ்சையன் மகள் சீறடி வீழ்ந்தனர்
அம் சில் ஓதிஅரும்பு அவிழ் கோதையார்

விளக்கவுரை :

2577. வீடு இல் ஐந்தரைக் கோடி விருத்தி மேல்
நாடி ஆயிரம் நாள் தொறும் நங்கை மார்க்கு
ஆடு சாந்து அடிசில் புறம் ஆக்கினான்
கோடு வால் ஒளிக் குங்குமக் குன்று அனான்

விளக்கவுரை :

[ads-post]

2578. ஆனை மும் மதம் ஆடிய காடு எலாம்
மானை நோக்கியர் வாய் மது ஆடின
வேனல் மல்கி வெண் தேர் சென்ற வெம் நிலம்
பானல் மல்கி வெண் பால் அன்னம் பாய்ந்தவே

விளக்கவுரை :

2579. மாரி மல்கி வளம் கெழு மண் மகள்
வாரி மல்கி வரம்பு இலள் ஆயினாள்
ஆரிய அடிசில் தளி ஆன் நெய் வார்ந்து
ஏரி ஆயின எங்கணும் என்பவே

விளக்கவுரை :

2580. ஏக வெண் குடை இன் நிழல் தண் அளி
மாகமாய்க் கடல் எல்லை நிழற்றலால்
போக பூமியும் பொன் கிளர் பூமியும்
நாகர் நாகமும் நாணி ஒழித்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books