சீவக சிந்தாமணி 2541 - 2545 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2541 - 2545 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2541. முனித் தலைக் கண்ணி நெற்றிச் சிறார் முலை முழாலின் பில்கிப்
புனிற்றுப் பால் பிலிற்றித் தேமா வடு இறுத்து ஆங்குப் பாய
நுனித்துக் கண் அரக்கி நோக்காது ஒசிந்து நின்றார்கள் அன்றே
கனிப் பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங் கொம்பு ஒத்தார்

விளக்கவுரை :

2542. அவிர் இழை சுடர முல்லை அலங்கல் அம் கூந்தல் சோரத்
தவிர் வெய்ய காமம் தாங்கித் தடமுலைக் கால்கள் சாய
இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார்
சுவர் செய்து ஆங்கு எழுதப்பட்ட துகிலிகைப் பாவை ஒத்தார்

விளக்கவுரை :

[ads-post]

2543. மாரி மா மயில் அனாரும் மைந்தரும் மயங்கினாரே
வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி எங்கும்
பூரித்துப் புதவம் தோறும் குவளையும் மரையும் பூத்துப்
பாரித்துப் பைம் பொன் நாகர் உலகு இவண் வீழ்ந்ததே போல்

விளக்கவுரை :

2544. கோதை தாழ் குடையின் நீழல் கொற்றவன் பருதி ஆக
மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த தௌ நீர்க்
காதம் நான்கு அகன்ற பொய்கைக் கடிநகர் குவளைப் பூத்துப்
பேதுறுகின்ற போன்ற பெருமழைக் கண்கள் மாதோ

விளக்கவுரை :

2545. மாந்தரும் மாவும் செல்ல மயங்கி மேல் எழுந்த நீறு
தேம் தரு கோதையார் தம் தௌ மட்டுத் துவலை மாற்ற
ஆய்ந்த பொன் நகரம் எங்கும் அணிகல ஒளியினாலே
காய்ந்து கண் கலக்கப் பூத்த கற்பகம் ஒத்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books