சீவக சிந்தாமணி 2536 - 2540 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2536 - 2540 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2536. கார் வளர் மின்னு வீசும் குண்டலம் காய் பொன் ஓலை
ஏர் வளர் பட்டம் ஏற்ப அணிந்து இருள் சுமந்து திங்கள்
நீர் வளர் நீலம் பூத்து நிரைத்த போல் நிரைத்த மேலால்
வார் வளர் முலையினார்தம் மாழை வாள் முகங்கள் மாதோ

விளக்கவுரை :

2537. குறை அணி கொண்ட வாறே கோதை கால் தொடர ஓடிச்
சிறை அழி செம் பொன் உந்தித் தேன் பொழிந்து ஒழுக ஏந்திப்
பறை இசை வண்டு பாடப் பாகமே மறைய நின்றார்
பிறை அணி கொண்ட அண்ணல் பெண் ஓர் பால் கொண்டது ஒத்தார்

விளக்கவுரை :

[ads-post]

2538. பொன் அரி மாலை பூண்டு பூஞ்சிகை குலாவி முன் கை
மின் அரிச் சிலம்பு தொட்டு விருப்பொடு விரைந்து போவான்
கன்னியர் ஆடி நோக்கித் தம்மைத் தாம் கண்டு நாணிப்
பின் அவை அணிந்து செல்வார் இடம் பெறாது ஒழிந்து போனார்

விளக்கவுரை :

2539. முத்து உலாய் நடந்த கோல முலை முதல் முற்றம் எல்லாம்
வித்திய வேங்கை வீயும் விழுப்பொனும் விளங்கக் காமத்
தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுடச் சுடர்ந்து நின்றார்
ஒத்து ஒளிர் காம வல்லி ஒருங்கு பூத்து உதிர்ந்தது ஒத்தார்

விளக்கவுரை :

2540. உகிர் வினை செய்து பஞ்சி ஒள்ளொளி அரத்தம் ஊட்டி
அகில் கமழ் அங்கை சேப்ப அரிவையர் அலங்கல் தாங்கி
வகிர்படு மழைக்கண் சின்னீர் மாக் கயல் எதிர்ந்தவே போல்
முகில் கிழி மின்னின் நோக்கி முரிந்து இடை குழைந்து நின்றார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books