சீவக சிந்தாமணி 2781 - 2785 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2781 - 2785 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2781. மங்கை மனா அனைய மென் சூல் மட உடும்பு
செங் கண் வரி வரால் செந் நீர் இள வாளை
வெம் கருனை புல்லுதற்கு வேறு வேறாக் குறைப்ப
அங்காந்து அழுகின்றது ஆர் கண்ணே நோக்குமே

விளக்கவுரை :

2782. கடல் அரணம் ஆகாது காடு அரணம் ஆகா
குடல் அரணம் ஆகாது குன்று அரணம் ஆகா
அடுதுயரம் ஊர்ந்து அலைப்ப ஆங்கு அரணம் காணாப்
படு துயரத்தாலே பதைத்து அளிய வேமே

விளக்கவுரை :

[ads-post]

2783. முழுப் பதகர் தாள் துரந்து முள் தாற்றில் குத்தி
உழப்பு எருது பொன்றப் புடைத்து உழுது விட்டால்
கழித்து உண்ணும் காக்கை கடிவோரும் இன்றிப்
புழுச் சொரியத் துன்பம் பொறுக்கலா பொன்றும்

விளக்கவுரை :

2784. நிரம்பாத நீர் யாற்று இடுமணலுள் ஆழ்ந்து
பெரும் பார ஆடவர் போல் பெய் பண்டம் தாங்கி
மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றித் தாள் தவழ்ந்து வாங்கி
உரம் கெட்டு உறுப்பு அழுகிப் புல் உண்ணா பொன்றும்

விளக்கவுரை :

2785. போழ் மதி போல் கூர் இரும்பின் பூ நுதல்கள் போழ்ந்திடவும்
காழ் நுதியின் குத்துண்டும் கார் மழை போல் நின்று அதிர்ந்தும்
வீழ் பிடிகள் சிந்தித்தும் வெம் நோய் தம் உள் சுட வெந்து
ஆழ்த்த கந்து இளக யானை அலம் வருமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books