சீவக சிந்தாமணி 2806 - 2810 of 3145 பாடல்கள்
2806. கருவியின் இசைகள் ஆர்ப்பக் கற்பக மரத்தின் நீழல்
பொரு கயல் அனைய கண்ணும் புருவமும் அரவம் செய்ய
அரவ மேகலைகள் அம் பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்பத்
திரு அனார் ஆடல் கண்டும் திருவொடு திளைத்தும் ஆனார்
விளக்கவுரை :
2807. பனி முகில் முளைத்த நான்கு பசுங் கதிர்த் திங்கள் ஒப்பக்
குனி மருப்பு உழுது மேகம் குஞ்சரம் குனிந்து குத்த
இனிதினின் இலங்கு பொன் தோடு ஏற்றுமின் குழைகள் பொங்கத்
துனிவு இலர் களிற்றோடு ஆடித் தொழுதகக் கழிப்பர் வேந்தே
விளக்கவுரை :
[ads-post]
2808. கடிகை வாள் ஆரம் மின்னக் கற்பகக் காவு கண்டும்
தொடி கவின் அறாத மென் தோள் தேவியர் சூழ வாமன்
அடி கையின் தொழுது பூத்தூய் அஞ்சலி செய்து வீடே
முடிக இப் பிறவி வேண்டேம் முனைவ என்று இரப்ப அன்றே
விளக்கவுரை :
2809. மலம் குவித்து ஆவி வாட்டி வாய் நிறை அமிர்தம் பெய்த
இலங்கு பொன் கலசம் அன்ன எரி மணி முலைகள் பாயக்
கலந்தனர் சென்ற பின் நாள் கதிர் கழன்று இருந்த வெய்யோன்
புலம்பு போல் புலம்பித் தேவர் பொற்பு உகுத்து இருப்ப அன்றே
விளக்கவுரை :
2810. எல்லை மூ ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும்
நல் எழில் மாலை வாடும் நஞ்சு உடை அமிர்து உண்டாரின்
பல் பகல் துய்த்த இன்பம் பழுது எனக் கவல்ப கண்டாய்
பில்கித் தேன் ஒழுகும் பைந்தார்ப் பெரு நில வேந்தர் வேந்தே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2806 - 2810 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books