சீவக சிந்தாமணி 2711 - 2715 of 3145 பாடல்கள்
2711. புலவியுள் மகளிர் கூந்தல் போது உகுக்கின்றதே போல்
குலவிய சிறகர்ச் செங் கண் கருங் குயில் குடையக் கொம்பர்
நிலவிய தாது பொங்க நீள் மலர் மணலில் போர்த்துக்
கலவியில் படுத்த காய் பொன் கம்பலம் ஒத்தது அன்றே
விளக்கவுரை :
2712. காசு நூல் பரிந்து சிந்திக் கம்பலத்து உக்கதே போல்
மூசு தேன் வண்டு மொய்த்து முருகு உண்டு துயில மஞ்ஞை
மாசு இல் பூம் பள்ளி வைகி வளர்ந்து எழு மகளிர் ஒப்பத்
தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு இரியச் சேர்ந்தார்
விளக்கவுரை :
[ads-post]
2713. காதிக் கண் அரிந்து வென்ற உலகு உணர் கடவுள் காலத்து
ஆதிக் கண் மரங்கள் போன்ற அம் சொலீர் இதனின் உங்கள்
காதலின் காணல் உற்ற இடம் எலாம் காண்மின் என்றான்
நீதிக் கண் நின்ற செங் கோல் நிலவு வீற்று இருந்த பூணான்
விளக்கவுரை :
2714. வானவர் மகளிர் என்ன வார் கயிற்று ஊசல் ஊர்ந்தும்
கானவர் மகளிர் என்னக் கடிமலர் நல்ல கொய்தும்
தேன் இமிர் குன்றம் ஏறிச் சிலம்பு எதிர் சென்று கூயும்
கோன் அமர் மகளிர் கானில் குழாம் மயில் பிரிவது ஒத்தார்
விளக்கவுரை :
2715. நெடு வரை அருவி ஆடிச் சந்தனம் நிவந்த சோலைப்
படு மதம் கவரும் வண்டு பைந் தளிர்க் கவரி ஏந்திப்
பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற பெருங் களிற்று அரசு நோக்கி
வடி மதர் மழைக் கண் நல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2711 - 2715 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books