சீவக சிந்தாமணி 2916 - 2920 of 3145 பாடல்கள்
2916. நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண் செவி மண் கொள் ஞாட்பில்
வேற்கு இடம் கொடுத்த மார்பின் வில்வலான் தோழர் மக்கள்
நால் கடல் வளாகம் காக்கும் நம்பி தன் கண்கள் ஆகப்
பால் கடல் கேள்வி யாரைப் பழிப்பு அற நாட்டி னானே
விளக்கவுரை :
2917. காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது காமர்
மா வலம் விளைத்த கோட்டு மழ களிற்று அரசன் அன்னான்
பூ அலர் கொடி அனாரை விடுக்கிய கோயில் புக்கான்
தூ அலர் ஒலியலார் தம் வலக் கண்கள் துடித்த அன்றே
விளக்கவுரை :
[ads-post]
துறவு உணர்த்தல்
2918. செம் பொனால் செறிய வேய்ந்து திருமணி முகடு கொண்ட
வெம்பு நீள் சுடரும் சென்னி விலங்கிய மாடம் எய்தி
அம் பொனால் தெளிந்த பாவை அனையவர்த் தம்மின் என்றான்
பைம் பொனால் வளர்க்கப் பட்ட பனை திரண்டு அனைய தோளான்
விளக்கவுரை :
2919. தின் பளித மாலைத் திரள் தாமம் திகழ் தீம் பூ
நன்கு ஒளி செய் தாமம் நறும் பூ நவின்ற தாமம்
பொன் தெளித்த தாமம் புரி முத்தம் மிளர் தாமம்
மின்தெளித்த மின்னு மணி வீழ்ந்த திரள் தாமம்
விளக்கவுரை :
2920. ஈன்ற மயில் போல் நெடிய தாமத்து இடை எங்கும்
மான்று மணம் விம்மு புகை மல்கி நுரையே போல்
தோன்றும் மணிக் கால் அமளித் தூ அணையின் மேலார்
மூன்று உலகம் விற்கும் முலை முற்று இழையினாரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2916 - 2920 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books