சீவக சிந்தாமணி 3066 - 3070 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3066 - 3070 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3066. செம்பொன் பின்னிய போல் தினைக் காவலர்
வெம்பு மும் மத வேழம் விலக்குவார்
தம் புனத்து எறி மா மணி சந்து பாய்ந்து
உம்பர் மீன் எனத் தோன்றும் ஓர் பால் எலாம்

விளக்கவுரை :

3067. யானை குங்குமம் ஆடி அருவரைத்
தேன் நெய் வார் சுனை உண்டு திளைத்து உடன்
கான மாப் பிடி கன்றொடு நாடகம்
ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர் பால் எலாம்

விளக்கவுரை :

[ads-post]

3068. வரிய நாக மணிச்சுடர் மல்கிய
பொரு இல் பொன் முழைப் போர்ப்புலிப் போதகம்
அரிய கின்னரர் பாட அமர்ந்து தம்
உருவம் தோன்ற உறங்கும் ஓர் பால் எலாம்

விளக்கவுரை :

3069. பழுத்த தீம் பலவின் கனி வாழையின்
விழுக் குலைக் கனி மாங்கனி வீழ்ந்தவை
தொழித்து மந்தி துணங்கை அயர்ந்து தேன்
அழிக்கும் அம் சுனை ஆடும் ஓர் பால் எலாம்

விளக்கவுரை :

3070. நளி சிலம்பதனின் உச்சி நாட்டிய பொன் செய் கந்தின்
ஒளியொடு சுடர வெம்பி உருத்து எழு கனலி வட்டம்
தெளி கடல் சுடுவது ஒத்துத் தீ உமிழ் திங்கள் நான்கும்
விளிவரும் குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books