சீவக சிந்தாமணி 2811 - 2815 of 3145 பாடல்கள்
2811. தேவரே தாமும் ஆகித் தேவரால் தொழிக்கப் பட்டும்
ஏவல் செய்து இறைஞ்சிக் கேட்டும் அணிகம் மாப்பணிகள் செய்தும்
நோவது பெரிதும் துன்ப நோயினுள் பிறத்தல் துன்பம்
யாவதும் துன்பம் மன்னோ யாக்கை கொண்டவர்கட்கு என்றான்
விளக்கவுரை :
நற்காட்சி
2812. கொங்கு விம்மு குளிர் பிண்டிக் குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்பச்
சிங்கம் சுமந்த மணி அணை மேல் தேவர் ஏத்திச் சிறப்பு அயர
எங்கும் உலகம் இருள் நீங்க இருந்த எந்தை பெருமானார்
தங்கு செந்தாமரை அடி என் தலையவே என் தலையவே
விளக்கவுரை :
[ads-post]
2813. இலங்கு செம் பொன் எயில் மூன்றும் எரி பொன் முத்தக் குடை மூன்றும்
வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும் வையம் மூன்றும் படை மூன்றும்
கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் காமர் நூல் மூன்றும்
நலம் கொள் தீம் பால் குணக் கடலும் உடையார் நம்மை உடையாரே
விளக்கவுரை :
2814. மன்றல் நாறும் அணி முடி மேல் மலிந்த சூளா மணி போலும்
வென்றோர் பெருமான் அறவாழி வேந்தன் விரி பூந் தாமரை மேல்
சென்ற திருவார் அடி ஏத்தித் தெளியும் பொருள்கள் ஓர் ஐந்தும்
அன்றி ஆறும் ஒன்பானும் ஆகும் என்பார் அறவோரே
விளக்கவுரை :
2815. பெரிய இன்பத்து இந்திரனும் பெட்ட செய்கைச் சிறு குரங்கும்
உரிய செய்கை வினைப் பயத்தை உண்ணும் எனவே உணர்ந்து அவனை
அரியர் என்ன மகிழாதும் எளியர் என்ன இகழாதும்
இரு சார் வினையும் தெளிந்தாரே இறைவன் நூலும் தெளிந்தாரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2811 - 2815 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books