சீவக சிந்தாமணி 2661 - 2665 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2661 - 2665 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2661. வீக்கினான் தாரை வெய்தாச் சந்தனத் தளிர் நல் மாலை
ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவச் சாந்தின்
பூக் கமழ் துகிலும் தோடும் மாலையும் சொரியப் போர் தோற்று
ஆக்கிய அநங்கன் சேனை ஆறு அல் ஆறு ஆயிற்று அன்றே

விளக்கவுரை :

2662. அன்னங்கள் ஆகி அம் பூந் தாமரை அல்லி மேய்வார்
பொன் மயில் ஆகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார்
இன் மலர்க் கமலம் ஆகிப் பூ முகம் பொருந்த வைப்பார்
மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடி தொழுது நிற்பார்

விளக்கவுரை :

[ads-post]

2663. பண் உரை மகளிர் மாலை பைந்துகில் கவர்ந்து கொள்ளக்
கண் உரை மகளிர் சேர்ந்து கார் இருள் திவளும் மின் போல்
பெண் உரைப் பிடிக்கைக் கூந்தல் பொன் அரி மாலை தாழ
வெண் நுரை உடுத்து நின்றார் வேந்தன் நோக்கு உண்ண நின்றார்

விளக்கவுரை :

2664. தன் படை உடையத் தத்தை சந்தனத் தாரை வீக்கி
ஒன்பது முகத்தின் ஓடி உறுவலி அகலம் பாயப்
பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இள முலையில் தூவான்
முன்பு அடு குலிகத் தாரை முழு வலி முறுக்கல் உற்றான்

விளக்கவுரை :

2665. மெய்ப்படு தாரை வீழின் நோம் இவட்கு என்ன அஞ்சிக்
கைப்படை மன்னன் நிற்பக் கதுப்பு அயல் மாலை வாங்கிச்
செப்பட முன்கை யாப்பத் திருமகன் தொலைந்து நின்றான்
பைப்புடை அல்குலாளைப் பாழியால் படுக்கல் உற்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books