சீவக சிந்தாமணி 2896 - 2900 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2896 - 2900 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2896. அம் சுரை பொழிந்த பால் அன்ன மெல் மயிர்ப்
பஞ்சி மெல் அணையின் மேல் பரவை அல்குலார்
மஞ்சு இவர் மதிமுகம் மழுங்க வைகினார்
நஞ்சு உயிர்த்து அணி நலம் கரிந்து நையவே

விளக்கவுரை :

2897. வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேகப்
புள் வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார்
கள் வயிற்று அலர்ந்த கோதைக் கலாப வில் உமிழும் அல்குல்
ஒள் எயிற்றவர்கள் பொன் பூத்து ஒளி மணி உருவம் நீத்தார்

விளக்கவுரை :

[ads-post]

2898. கிளிச் சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்கக்
குளித்து நீர் இரண்டு கோலக் கொழுங் கயல் பிறழ்பவே போல்
களித்து நீர் சுமந்து வாள் கண் கலாஅய் பிறழ்ந்து அலமந்து ஆட
அளித்த தார் அலங்கல் ஆழி அவன் துறவு உரைத்தும் அன்றே

விளக்கவுரை :

2899. புனை மருப்பு அழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற
கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை உரிவை போர்த்த
துனை குரல் முரசத் தானைத் தோன்றலைத் தம்மின் என்றான்
நனை மலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான்

விளக்கவுரை :

2900. கொடி அணி அலங்கல் மார்பில் குங்குமக் குன்றம் அன்னான்
அடி பணிந்து அருளு வாழி அரசருள் அரச என்னப்
படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க
இடி உமிழ் முரசம் நாண இன்னணம் இயம்பினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books