சீவக சிந்தாமணி 2831 - 2835 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2831 - 2835 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2831. காய்ந்த அவ் அளவினால் கௌவும் நீரது ஒத்து
ஆய்ந்து அறி கொடையினது அளவில் புண்ணியம்
தோய்ந்து உயிர் உடம்பு இவண் ஒழியத் தொக்க நாள்
வீந்து போய் வயிற்று அகம் விதியின் எய்துமே

விளக்கவுரை :

2832. திங்கள் ஒன்பதும் வயிற்றில் சேர்ந்த பின்
வங்க வான் துகில் பொதி மணி செய் பாவை போல்
அங்கு அவர் இரட்டைகள் ஆகித் தோன்றலும்
சிங்கினார் இரு முது குரவர் என்பவே

விளக்கவுரை :

[ads-post]

2833. இற்று அவர் தேவராய்ப் பிறப்ப ஈண்டு உடல்
பற்றிய விசும்பு இடைப் பரவும் மா முகில்
தெற்று என வீந்து எனச் சிதைந்து போகுமால்
மற்ற அம் மக்கள் தம் வண்ணம் செப்புவாம்

விளக்கவுரை :

2834. பிறந்த அக் குழவிகள் பிறர்கள் யாவரும்
புறந்தரல் இன்றியே வளர்ந்து செல்லும் நாள்
அறைந்தனர் ஒன்று இலா ஐம்பது ஆயிடை
நிறைந்தனர் கலை குணம் உறுப்பு நீரவே

விளக்கவுரை :

2835. சோலை மீன் அரும்பித் திங்கள் சுடரொடு பூத்ததே போல்
மாலையும் கலனும் ஈன்று வடகமும் துகிலும் நான்று
காலையும் இரவும் இல்லாக் கற்பக மரத்தின் நீழல்
பாலை யாழ் மழலை வேறாய்ப் பல் மணிக் கொம்பின் நின்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books