சீவக சிந்தாமணி 3026 - 3030 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3026 - 3030 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3026. ஒத்து ஒளி பெருகிய உருவப் பொன் நகர்
வித்தகன் வலம் செய்து விழுப் பொன் பூமி போய்
மத்தக மயிர் என வளர்த்த கைவினைச்
சித்திரக் காவகம் செல்வன் எய்தினான்

விளக்கவுரை :

3027. ஏம நீர் உலகம் ஓர் இம்மிப் பால் என
நாம வேல் நரபதி நீக்கி நன்கலம்
தூமம் ஆர் மாலையும் துறக்கின்றான் அரோ
காமனார் கலம் கழிக்கின்றது ஒத்ததே

விளக்கவுரை :

[ads-post]

3028. மணி உறை கழிப்பது போல மங்கலப்
பணி வரு பைந்துகில் நீக்கிப் பால் கடல்
அணிபெற அரும்பிய அருக்கன் ஆம் எனத்
திணி நிலத்து இயன்றது ஓர் திலகம் ஆயினான்

விளக்கவுரை :

3029. மலிந்த நல் மாலைகள் வண்ணப் பூந்துகில்
நலிந்து மின் நகு மணி நன் பொன் பேர் இழை
மெலிந்தனென் சுமந்து என நீக்கி மேல் நிலைப்
பொலிந்தது ஓர் கற்பகம் போலத் தோன்றினான்

விளக்கவுரை :

3030. திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே
இருந்தது ஓர் இடி குரல் சிங்கம் பொங்கி மேல்
சுரிந்த தன் உளை மயிர் துறப்பது ஒத்தனன்
எரிந்து எழும் இளஞ் சுடர் இலங்கும் மார்பினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books