சீவக சிந்தாமணி 2701 - 2705 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2701 - 2705 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

புதல்வர்ப் பேறு

2701. இவ்வாறு எங்கும் விளையாடி இளையான் மார்பின் நலம் பருகிச்
செவ்வாய் விளர்த்துத் தோள் மெலிந்து செய்ய முலையின் முகம் கருகி
அவ்வாய் வயிறு கால் வீங்கி அனிச்ச மலரும் பொறை ஆகி
ஒவ்வாப் பஞ்சி மெல் அணை மேல் அசைந்தார் ஒண் பொன் கொடி அன்னார்

விளக்கவுரை :

2702. தீம் பால் சுமந்து முலை வீங்கித் திருமுத்து ஈன்ற வலம்புரி போல்
காம்பு ஏர் தோளார் களிறு ஈன்றார் கடைகள் தோறும் கடி முரசம்
தம் பால் பட்ட தனிச் செங் கோல் தரணி மன்னன் மகிழ் தூங்கி
ஓம்பாது ஒண் பொன் சொரி மாரி உலகம் உண்ணச் சிதறினான்

விளக்கவுரை :

[ads-post]

2703. காடி ஆட்டித் தராய்ச் சாறும் கன்னல் மணியும் நறு நெய்யும்
கூடச் செம் பொன் கொளத் தேய்த்துக் கொண்டு நாளும் வாய் உறீஇப்
பாடற்கு இனிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித்
தேடித் தீம் தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்கு உயர்த்தார்

விளக்கவுரை :

2704. யாழும் குழலும் அணி முழவும் அரங்கம் எல்லாம் பரந்து இசைப்பத்
தோழன் விண்ணோன் அவண் தோன்றி வயங்காக் கூத்து வயங்கிய பின்
காழ் ஆர் வெள்ளி மலை மேலும் காவல் மன்னர் கடி நகர்க்கும்
வீழா ஓகை அவன் விட்டான் விண் பெற்றாரின் விரும்பினார்

விளக்கவுரை :

2705. தத்தம் நிலனும் உயர்வு இழிவும் பகையும் நட்பும் தம் தசையும்
வைத்து வழுஇல் சாதகமும் வகுத்த பின்னர்த் தொகுத்த நாள்
சச்சந்தணனே சுதஞ்சணனே தரணி கந்துக் கடன் விசயன்
தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books