சீவக சிந்தாமணி 2816 - 2820 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2816 - 2820 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2816. உறுவர்ப் பேணல் உவர்ப்பு இன்மை உலையா இன்பம் தலை நிற்றல்
அறிவர் சிறப்பிற்கு எதிர் விரும்பல் அழிந்தோர் நிறுத்தல் அறம் பகர்தல்
சிறியார் இனத்துச் சேர்வு இன்மை சினம் கைவிடுதல் செருக்கு அவித்தல்
இறைவன் அறத்து உளார்க்கு எல்லாம் இனியர் ஆதல் இது தெளிவே

விளக்கவுரை :

2817. செறியச் சொன்ன பொருள் தெளிந்தார் சேரார் விலங்கில் பெண் ஆகார்
குறுகார் நரகம் ஓர் ஏழும் கீழ் முத்தேவர் குழாம் தீண்டார்
அறியாது உரைத்தேன் அது நிற்க ஆறே நரகம் ஆகாத
பொறியார் போக பூமியுள் விலங்கும் ஆவர் ஒரு சாரார்

விளக்கவுரை :

[ads-post]

சீலம்

2818. ஏத்த அருந் திருமணி இலங்கு நீர்மைய
கோத்தன போல் குணம் நூற்றுக் கோடியும்
காத்தன காவல பதின் எண் ஆயிரம்
பாத்தன பண்ணவர் சீலம் என்பவே

விளக்கவுரை :

2819. மொய் அமர் ஞாட்பினுள் முரண் கொள் மன்னவர்
மெய்புகு பொன் அணி கவசம் ஒப்பன
மையல் ஐம் பொறி மதம் வாட்டி வைகலும்
செய்வினை நுணுக்குவ சீலம் என்பவே

விளக்கவுரை :

2820. மணித் துணர் அனைய தம் குஞ்சி வண் கையால்
பணித்தனர் பறித்தலின் பரவை மா நிலம்
துணித்து ஒரு துணி சுமந்து அனைய திண் பொறை
அணித்தகு முடியினாய் ஆதி ஆகவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books