சீவக சிந்தாமணி 2986 - 2990 of 3145 பாடல்கள்
2986. ஆற்றிய மக்கள் என்னும் அருங் தவம் இலார்கள் ஆகின்
போற்றிய மணியும் பொன்னும் பின் செலா பொன் அனீரே
வேற்றுவர் என்று நில்லா விழுப் பொருள் பரவை ஞாலம்
நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்மின் நீரும் என்றான்
விளக்கவுரை :
2987. காதல் அம் சேற்றுள் பாய்ந்த மதி எனும் கலங்கல் நீரை
ஊது வண்டு உடுத்த தாரான் உவர்ப்பினின் உரிஞ்சித் தேற்ற
மாதரார் நெஞ்சம் தேறி மாதவம் செய்தும் என்றார்
காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடுங் கணாரே
விளக்கவுரை :
[ads-post]
2988. தூமம் சால் கோதை யீரே தொல் வினை நீத்தம் நீந்தி
நாமம் சால் கதியின் நீங்கி நன் பொன் மேல் உலகின் உச்சி
ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்மின் என்றான்
காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சனக் குன்றம் அன்னான்
விளக்கவுரை :
2989. நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும்
ஆடகக் கலத்துள் ஆன் பால் அமிர்தினை நயந்து உண்பாரை
நீடு அகம் வெகுண்டும் கையால் பிடித்து நீறு அட்டி இட்டேம்
கோடகம் அணிந்த கோல முடியினாய் துறத்தும் என்றார்
விளக்கவுரை :
2990. சாந்தம் கிழிய முயங்கித் தட மலரால்
கூந்தல் வழிபட்ட கோவே நீ செல் உலகில்
வாய்ந்து அடியேம் வந்து உன் வழிபடும் நாள் இன்றே போல்
காய்ந்து அருளல் கண்டாய் எனத் தொழுதார் காரிகையார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2986 - 2990 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books