சீவக சிந்தாமணி 2991 - 2995 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2991 - 2995 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

தேவிமார் துறவு

2991. தெண் திரை நீத்தம் நீந்தித் தீம் கதிர் சுமந்து திங்கள்
விண் படர்ந்த அனைய மாலை வெண் குடை வேந்தர் வேந்தன்
கண் திரள் முத்த மாலைக் கதிர் முலை நங்கைமாரை
வெண் திரை வியக்கும் கேள்வி விசயைகண் அபயம் வைத்தான்

விளக்கவுரை :

2992. கடி மலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்பும் காமர்
வடிமலர் மலர்ந்த காம வல்லியும் தம்மைத் தாமே
உடை மலர் கொய்து போக உகுத்திடு கின்றது ஒத்தார்
படை மலர் நெடுங் கண் நல்லார் பாசிழை நீக்கு கின்றார்

விளக்கவுரை :

[ads-post]

2993. தழுமலர்த் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும்
செழுமணி நிலத்துச் செம் பொன் திரு முத்த விதான நீழல்
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார்
கழுமிய துகிலின் காமன் கண் புடைத்து இரங்க மாதோ

விளக்கவுரை :

2994. நறும் புகை நான நாவிக் குழம்பொடு பளிதச் சுண்ணம்
அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்த பைங் கூந்தலாய் பொன்
நிறம் தரு கொம்பு நீலக் கதிர்க் கற்றை உமிழ்வவே போல்
செறிந்து இருந்து உகுத்துச் செம்பொன் குணக்கொடி ஆயினாரே

விளக்கவுரை :

பெரிய யாத்திரை

2995. இலம் பெரிது என இரந்தவர்கட்கு ஏந்திய
கலம் சொரி காவலன் கடகக் கை இணை
புலம் புரிந்து உயர்ந்தன இரண்டு பொன் நிற
வலம்புரி மணி சொரிகின்ற போன்றவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books