சீவக சிந்தாமணி 3046 - 3050 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3046 - 3050 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3046. தீம் பால் நுரை போல் திகழ் வெண் பட்டு உடுத்து வண்டு ஆர்
தேம் பாய சாந்தம் மெழுகிக் கலன் தேறல் மாலை
தாம் பால தாங்கிப் புகழ் தாமரைக் குன்றம் அன்ன
ஆம் பால் மயிர் வேய்ந்து அயிராவணம் ஏறினானே

விளக்கவுரை :

3047. எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணிச் செப்பு வெள்ளம்
பொறிவரி வண்டு பாடும் பூஞ் சுண்ணம் நிறைந்த பொன் செப்பு
அறிவரிது உணர்வு நாணித் தலை பனித்து அஞ்சும் சாந்தம்
செறி இரும் பவழச் செப்புத் தெண்கடல் திரையின் நேரே

விளக்கவுரை :

[ads-post]

3048. வந்து தேன் மயங்கி மூசு மலயச் செஞ் சாந்தம் ஆர்ந்த
சந்தனச் செப்பும் கங்கை தரு மணல் அலகை ஆற்றாச்
சுந்தரம் பெய்த யானைத் தூ மருப்பு இயன்ற வெண் செப்பு
அந்தரத்து அலர்ந்த பல் மீன் எனைத்து உள அனைத்தும் மாதோ

விளக்கவுரை :

3049. மை பொதி குவளை வாள் கண் மல்லிகைக் கோதை நல்லார்
நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும்
கொய் சுவல் புரவி மான்தேர் குழுமணி ஓடை யானை
மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரைப் பலி சுமந்த அன்றே

விளக்கவுரை :

3050. கொடிக் குழாம் குஞ்சி பிச்சக் குழாம் நிறை கோல மாலை
முடிக் குழாம் மூரி வானம் பால் சொரிகின்றது ஒக்கும்
குடைக் குழாம் இவற்றின் பாங்கர்க் குளித்தது குளிர் சங்கு ஆர்க்கும்
படைக் குழாம் பாரில் செல்லும் பால் கடல் பழித்த அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books