சீவக சிந்தாமணி 2931 - 2935 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2931 - 2935 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2931. புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள
கள் அவிழ் கோதையீர் காண்மின் நல் வினை
ஒள்ளியான் ஒருமகன் உரைத்தது என்னன்மின்
தௌளியீர் அறத் திறம் தெரிந்து கொள்மினே

விளக்கவுரை :

2932. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும்
தேய்தலும் உடைமையைத் திங்கள் செப்புமால்
வாய் புகப் பெய்யினும் வழுக்கி நல்லறம்
காய்வது கலதிமைப் பாலது ஆகுமே

விளக்கவுரை :

[ads-post]

2933. புள்ளி நீர் வீழ்ந்தது பெருகிப் புன் புலால்
உள் வளர்ந்து ஒரு வழித் தோன்றிப் பேர் அறம்
உள்குமேல் முழுப் புலால் குரம்பை உய்ந்து போய்
வெள்ள நீர் இன்பமே விளைக்கும் என்பவே

விளக்கவுரை :

2934. பால்துளி பவள நீர் பெருகி ஊன் திரண்டு
ஊற்று நீர்க் குறும் புழை உய்ந்து போந்த பின்
சேற்று நீர்க் குழியுளே அழுந்திச் செல் கதிக்கு
ஆற்று உணாப் பெறாது அழுது அலறி வீழுமே

விளக்கவுரை :

2935. திருந்திய நல் அறச் செம் பொன் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்
கரும்பு எனத் திரண்ட தோள் கால வேல்கணீர்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books