சீவக சிந்தாமணி 2906 - 2910 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2906 - 2910 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2906. பால் வளை பரந்து மேயும் படுகடல் வளாகம் எல்லாம்
கோல் வளையாமல் காத்து உன் குடை நிழல் துஞ்ச நோக்கி
நூல் விளைந்து அனைய நுண்சொல் புலவரோடு அறத்தை ஓம்பின்
மேல் விளையாத இன்பம் வேந்த மற்று இல்லை கண்டாய்

விளக்கவுரை :

2907. வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும்
காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின்
வாய்ப்படல் இன்றிப் பொன்றும் வல்லன் ஆய் மன்னன் கொள்ளின்
நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2908. நெல் உயிர் மாந்தர்க்கு எல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பின்
புல் உயிர் புகைந்து பொங்கு முழங்கு அழல் இலங்கு வாள்கை
மல்லல் அம் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய்
நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான்

விளக்கவுரை :

2909. ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணித் தேரை வல்லான்
நேர் நிலத்து ஊரும் ஆயின் நீடு பல் காலம் செல்லும்
ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும்
தார் நில மார்ப வேந்தர் தன்மையும் அன்னது ஆமே

விளக்கவுரை :

2910. காய்ந்து எறி கடுங்கல் தன்னைக் கவுள் கொண்ட களிறுபோல
ஆய்ந்த அறிவுடையர் ஆகி அருளொடு வெகுளி மாற்றி
வேந்தர் தாம் விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்
நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books