சீவக சிந்தாமணி 2901 - 2905 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2901 - 2905 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2901. ஊன் உடைக் கோட்டு நாகு ஆன் சுரிமுக ஏற்றை ஊர்ந்து
தேன் உடைக் குவளைச் செங் கேழ் நாகு இளந் தேரை புல்லிக்
கான் உடைக் கழனிச் செந்நெல் கதிர் அணைத் துஞ்சும் நாடு
வேல் மிடைத் தானைத் தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான்

விளக்கவுரை :

2902. கரும்பு அலால் காடு ஒன்று இல்லாக் கழனி சூழ் பழன நாடும்
சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன்
அரும்பு உலாய் அலர்ந்த அம் மென் தாமரை அனைய பாதம்
விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான்

விளக்கவுரை :

[ads-post]

2903. குன்று என மருண்டு கோல மணி வண்டும் குழாம் கொள் தேனும்
சென்று மொய்த்து இமிரும் யானைச் சீவகற்கு இளைய நம்பி
மன்றல் வீற்று இருந்து மின்னும் மணிக் குவடு அனைய தோளான்
ஒன்றும் மற்று அரசு வேண்டான் உவப்பதே வேண்டினானே

விளக்கவுரை :

2904. பொலிவு உடைத்து ஆகுமேனும் பொள்ளல் இவ் உடம்பு என்று எண்ணி
வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தடக்கை வையாது
ஒலி உடை உருமுப் போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல்
கலி கடிந்து உலகம் காக்கும் காளையைக் கொணர்மின் என்றான்

விளக்கவுரை :

2905. கழு மணி ஆர மார்பின் காவலன் மக்கள் காய் பொன்
எழு வளர்ந்து அனைய திண் தோள் இளையவர் தம்முள் மூத்த
தழு மலர்க் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த நம்பி
விழுமணிப் பூணினான் வீற்று இரீஇ விதியின் சொன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books