சீவக சிந்தாமணி 3021 - 3025 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3021 - 3025 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3021. செழும் பொன் வேய்ந்து மணி அழுத்தித் திருவார் வைரம் நிரைத்து அதனுள்
கொழுந்து மலரும் கொளக் குயிற்றிக் குலாய சிங்கா தனத்தின் மேல்
எழுந்த பருதி இருந்தால் போல் இருந்த எந்தை பெருமானே
அழுந்தேன் வந்து உன் அடி அடைந்தேன் அருவாய்ப் போதல் அழகிதோ

விளக்கவுரை :

3022. குண்டலமும் பொன் தோடும் பைந்தாரும் குளிர் முத்தும்
வண்டு அலம்பு மாலையும் மணித் தொத்தும் நிலம் திவள
விண்டு அலர் பூந் தாமரையின் விரை ததும்ப மேல் நடந்த
வண்டு அலர் பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான்

விளக்கவுரை :

[ads-post]

3023. நில விலகி உயிர் ஓம்பி நிமிர்ந்து ஒளிர்ந்து பசி பகை நோய்
உலகம் இருள் கெட விழிக்கும் ஒண் மணி அற ஆழி
அலகை இலாக் குணக் கடலை அகல் ஞான வரம்பானை
விலை இலா மணி முடியான் விண் வியப்ப இறைஞ்சினான்

விளக்கவுரை :

3024. தூய்த் திரள் மணித் தாமம் சொரிந்து பொன் நிலம் நக்கப்
பூத்திரள் மணி மாலைப் போர்ச் சிங்கம் போதகம் போல்
ஏத்த அரிய குணக் கடலை இகல் இன்ப வரம்பானைத்
தோத்திரத்தால் தொழுது இறைஞ்சித் துறப்பேன் என்று எழுந்து இருந்தான்

விளக்கவுரை :

3025. முடி அணி அமரரும் முலை நல்லார்களும்
புடை பணிந்து இருந்த அப் புலவன் பொன் நகர்
கடி மலர்க் கற்பகம் காம வல்லியோடு
இடை விராய் எங்கணும் பூத்தது ஒத்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books