சீவக சிந்தாமணி 3016 - 3020 of 3145 பாடல்கள்
3016. மன்னவன் துறவு எனத் துறத்தல் மாண்பு எனப்
பொன் வரை வாய் திறந்த ஆங்குப் புங்கவன்
இன் உரை எயிறு வில் உமிழ வீழ்ந்தது
மின்னி ஓர் வியன் மழை முழங்கிற்று ஒத்ததே
விளக்கவுரை :
சீவகன் துறவு
3017. காய் களிற்றின் இடை மருப்பின் கவளம் போன்று ஏமாராக் கதியுள் தோன்றி
ஆய் களிய வெவ் வினையின் அல்லாப்பு உற்று அஞ்சினேன் அறிந்தார் கோவே
வேய் களிய வண்டு அறைய விரிந்து அலர்ந்த தாமரையின் விரை சேர் போதின்
வாய் ஒளியே பெற நடந்த மலர் அடியை வலம் கொண்டார் வருந்தார் போலும்
விளக்கவுரை :
[ads-post]
3018. சேடு ஆர் பொன் திருமணி வைரத் தொத்து அணிந்து உலகு ஓம்பும்
வாடா மாலை வார் தளிர்ப் பிண்டி வாம நின் குணம் நாளும்
பாடாதாரைப் பாடாது உலகம் பண்ணவர் நின் அடிப் பூச்
சூடாதார் தாள் சூடார் மாலைச் சுடர் மணி நெடு முடியே
விளக்கவுரை :
3019. வையம் மூன்றும் உடன் ஏத்த வளரும் திங்கள் வாள் எயிற்று
ஐய அரிமான் மணி அணை மேல் அமர்ந்தோய் நின்னை அமராதார்
வெய்ய வெம் நோய் வினை உதைப்ப வீழ்ந்து துன்பக் கடல் அழுந்தி
நெய்யும் நுண் நூல் நாழிகையின் நிரம்பா நின்று சுழல்வாரே
விளக்கவுரை :
3020. தொழுதிப் பல் மீன் குழாம் சூழத் துளும்பாது இருந்த திங்கள் போல்
முழுதும் வையம் உடன் ஏத்த முதுவாய் வலவையாய் இருந்து
அழுது வினைகள் அல்லாப்ப அறைந்தோய் நின் சொல் அறைந்தார்கள்
பழுதுஇல் நறு நெய்க் கடல் சுடர்போல் பல்லாண்டு எல்லாம் பரியாரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3016 - 3020 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books