3116. முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததே போல்
திளைத்து எழு கொடிகள் செந்தீத் திருமணி உடம்பு நுங்க
விளைத்த பின் விண்ணும் மண்ணும் மங்கலம் வகையில் செய்து
வளைப் பொலி கடலின் ஆர்த்து வலம் கொண்டு நடந்த அன்றே
விளக்கவுரை :
3117. கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண்
பூ அலர் முல்லைக் கண்ணிப் பொன் ஒரு பாகம் ஆகக்
காவலன் தான் ஓர் கூறாக் கண் இமையாது புல்லி
மூ உலகு உச்சி இன்பக் கடலினுள் மூழ்கினானே
விளக்கவுரை :
3118. பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா
அரிவையைப் புல்லி அம் பொன் அணி கிளர் மாடத்து இன் தேன்
சொரி மது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம் பாய்
விரிபுகை விளக்கு விண்ணோர் ஏந்த மற்று உறையும் அன்றே
விளக்கவுரை :
3119. தேவிமார் நோற்று உயர்வு வல்லவன் வடித்த வேல் போல்
மலர்ந்து நீண்டு அகன்ற வாள் கண் மெல்லவே உறவி ஓம்பி
ஒதுங்கியும் இருந்தும் நின்றும் முல்லை அம் சூட்டு வேயின்
முரிந்து போம் நுசுப்பின் நல்லார் மல்லல் குன்று ஏந்தி
அன்ன மாதவம் முற்றினாரே
விளக்கவுரை :
3120. சூழ் பொன் பாவையைச் சூழ்ந்து புல்லிய
காழகப் பச்சை போன்று கண் தெறூஉம்
மாழை நோக்கினார் மேனி மாசு கொண்டு
ஏழைப் பெண் பிறப்பு இடியச் சிந்தித்தார்
விளக்கவுரை :