சீவக சிந்தாமணி 3106 - 3110 of 3145 பாடல்கள்
3106. வாள் கை அம் மைந்தர் ஆயும் வனமுலை மகளிர் ஆயும்
வேட்கையை மிகுத்து வித்திப் பிறவி நோய் விளைத்து வீயாத்
தேள் கையில் கொண்டது ஒக்கும் நிச்சம் நோய்ச் செற்றப் புன் தோல்
பூட்கையை முனியின் வாமன் பொன் அடி தொழுமின் என்றான்
விளக்கவுரை :
3107. தன் உயிர் தான் பரிந்து ஓம்பு மாறு போல்
மன் உயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன் உயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன் உயிராய்ப் பிறந்து உயர்ந்து போகுமே
விளக்கவுரை :
[ads-post]
3108. நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும்
உருப்பு உயிர் இருவினை உதைப்ப வீழ்ந்த பின்
புரிப் புரிக் கொண்டு போய்ப் பொதிந்து சுட்டிட
இருப்பு உயிர் ஆகி வெந் எரியுள் வீழுமே
விளக்கவுரை :
3109. மழைக் குரல் உருமு உவா ஓத மாக் கடல்
பிழைத்த ஓர் அருமணி பெற்றது ஒக்குமால்
குழைத் தலைப் பிண்டியான் குளிர் கொள் நல்லறம்
தழைத் தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்ததே
விளக்கவுரை :
3110. மல்கு பூங் கற்பக மரத்தின் நீழலான்
நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ
பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர்
செல்வம் கண்டு அதற்கு அவாச் சிந்தை செய்யுமோ
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3106 - 3110 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books